Sign In
காட்டிற்குள் ஒரு இள மான் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது.
அடடே! முயலையே முந்தி விட்டது!
யானையைக் கூட முந்தி விட்டதே!
ஓடையை ஒரே தாவாகத் தாவி விட்டது!
தகர்ந்து கிடந்த சுவரையும் தாண்டி ஓடியது.
புல்தரையில் இருந்த பெரிய பாறாங்கல்லை கவனிக்காமல் ஓடியதால் கால் தடுமாறி கீழே விழுந்து விட்டது.
பாவம்… கண்ணீரில் மூழ்கி விட்டது...
குரங்கு ஒன்று மெதுவாக மானின் காலைத் தடவிக் கொடுத்தது. மானின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
கரடி அண்ணன் மானை முதுகில் தூக்கி கொண்டு போனது. மானிற்கு அழுகை இன்னும் நிற்கவில்லை.
மானின் அம்மா ஓடி வந்து, “அழாதே! அந்தக் கெட்ட பாறாங்கல்லை நாம் அடித்து விடலாம்” என்று சொன்னது.
உடனே மான், “வேண்டாம் அம்மா… அதற்கு வலித்தால் அதுவும் அழ ஆரம்பித்து விடும்” என்றது. இதைக் கேட்டதும் தாய் மானுக்குச் சிரிப்பு வந்தது. குட்டி மானும் சேர்ந்து சிரித்தது.
மானின் சிரிப்பு (English-Tamil), translated by Idhaya Swaruba Princy, (© Idhaya Swaruba Princy, 2019) from Smile Please! (English), by Sanjiv Jaiswal 'Sanjay' based on original story वह हँस दिया (Hindi), written by Sanjiv Jaiswal 'Sanjay', illustrated by Ajit Narayan, published by Pratham Books under a CC BY 4.0 license on StoryWeaver. Read, create and translate stories for free on www.storyweaver.org.in