Sign In

வாழை மரம் மிகவும் பயனுள்ள மரமாகும். அதன் ஒவ்வொரு பாகமும் நமக்கு பயன் தருகிறது. வாழை அதன் பழங்களுக்காகவும், நாருக்காகவும் பயிரிடப்படுகிறது.

வாழை இலையில் உணவு பரிமாறலாம். முதிர்ந்த இலைகள் கரும்பச்சை நிறத்திலும், புதிய இலைகள் இளம்பச்சை நிறத்திலும் இருக்கும்.

வாழைப்பூ அடர் ஊதாவும் சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். அது துவர்ப்பு சுவை கொண்டது. வாழைப்பூவில் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.

வாழைப்பூவிலிருந்து காய்கள் அடுக்கு அடுக்காக வரும். ஒவ்வொரு அடுக்கிலும் 5 முதல் 20 காய்கள் வரை இருக்கும். அதற்க்கு சீப்பு என்று பெயர்.

சீப்புகள் வாழைப்பூவின் காம்பை சுற்றி அமைந்திருக்கும். இது வாழைத்தார் என்றும் வாழைக்குலை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு வாழை மரம் ஒரு குலை பழங்களை மட்டுமே தரும்.

வாழைக்காய் பச்சை நிறத்தில் இருக்கும். வாழைக்காயில் கூட்டு, பொரியல், சூப் மற்றும் பஜ்ஜி செய்து சாப்பிடலாம். அதை எண்ணையில் பொரித்து சிப்ஸ் செய்தும் சாப்பிடலாம்.

வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். பொதுவாக வாழைப்பழம் மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். இது நார்ச்சத்து நிறைந்த பழம். வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும்.