Sign In
ஒரு நாள் காலையில் எறும்பு ஒன்று இரை தேடி சென்றது. அன்று வெயில் அதிகமாக இருந்தது. அதனால் எறும்புக்கு அது வழக்கமாக நீர் அருந்தும் இடத்துக்கு செல்வதற்கு முன்பே தாகம் எடுத்தது. பக்கத்திலேயே ஒரு ஆறு இருப்பதைப் பார்த்தது. மகிழ்ச்சியுடன் தண்ணீர் குடிக்க ஆற்றை நோக்கி நடந்தது.
எறும்பு ஆற்றின் கரை ஓரத்தில் இருந்து தண்ணீர் குடிக்க முயன்ற போது வழுக்கி ஆற்றில் விழுந்து விட்டது.
ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் எறும்பால் நீந்திக் கரை ஏற முடியவில்லை.
“காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று கத்தியது எறும்பு.
அதே நேரத்தில் புறா ஒன்று ஆற்றின் கரையிலிருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அது எறும்பின் அலறல் கேட்டு, சத்தம் வந்த திசையை உற்று நோக்கியது. எறும்பு நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது.
“ஐயோ பாவம். இந்த எறும்புக்கு எப்படியாவது உதவ வேண்டும் “ என்று நினைத்தது புறா.
புறா தான் அமர்ந்திருந்த மரத்தின் கிளையிலிருந்து ஒரு இலையைப் பறித்து ஆற்றில் போட்டது.
“இலையின் மேல் ஏறி கரைக்கு வா” என்று கத்தியது புறா.
எறும்பும் விடாது முயன்று இலையின் மேல் ஏறி கரை வந்து சேர்ந்தது.
உதவிக்கு நன்றி கூறியது எறும்பு. அன்று முதல் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.
சில காலம் கழித்து வேடன் ஒரு நாள் அந்த காட்டுக்குள் வந்தான். அவன் அங்கு வழக்கம் போல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்த புறாவைப் பார்த்தான். உடனே அதைப் பிடிக்க எண்ணி வில்லில் அம்பு வைத்துக் குறி பார்த்தான்.
அதை சற்று தூரத்தில் இருந்த எறும்பு பார்த்து விட்டது.
நண்பனைக் காக்க எறும்பு விரைந்து சென்று வேடனின் காலில் ஏறி நறுக்கென்று கடித்தது. அதனால் வேடனின் குறி தவறியது. சத்தம் கேட்டு புறா பறந்தது.
நீதி: நல்லது செய்தால் நல்லதே நடக்கும்.