Sign In
அது ஒரு வெயில் காலம். தாகம் கொண்ட காகம் ஒன்று தண்ணீர் தேடி அலைந்தது. சிறிய குளம் குட்டைகள் எல்லாம் ஏற்கனவே வற்றிப்போய் இருந்தன. அதனால் காகம் தண்ணீர் தேடி வயல்வெளிகளின் மேல் பறந்தது. அங்கும் தண்ணீர் கிடைக்காததால் அருகில் இருந்த ஒரு ஊருக்குள் சென்றது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு, ஒரு பண்ணையில் மரத்தின் அடியில் பானை ஒன்று இருப்பதை காகம் பார்த்தது. உடனே காகம் கீழ்நோக்கிப் பறந்து மரத்தில் உட்கார்ந்தது. பின் வேகமாக சென்று பானையின் உள்ளே எட்டிப் பார்த்தது. அதில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே இருந்தது.
காகம் பானையின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு உடம்பை வளைத்து தண்ணீர் குடிக்க முயன்றது. தண்ணீரை காகத்தால் எட்ட முடியவில்லை. பின் பானையை தள்ளி சாய்க்க முயன்றது காகம். பானை மிகவும் கனமாக இருந்ததால் தள்ள முடியவில்லை.
நேரம் ஆக ஆக தாகம் கூடிக் கொண்டே போனது. என்ன செய்வது என்று யோசித்தது காகம். பானையின் அருகில் சிறிய கற்கள் கிடப்பதைப் பார்த்தது. உடனே அதற்கு ஒரு திட்டம் தோன்றியது.
கற்களை ஒவ்வொன்றாக அலகால் கொத்தி தூக்கி பானையின் உள்ளே போட்டது காகம்.
கற்கள் பானையில் இருந்த தண்ணீருக்கு அடியில் சென்றன. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது. சீக்கிரமாகவே தண்ணீர் காகம் குடிக்கும் அளவுக்கு மேலே வந்தது. தன் தாகம் தீர காகம் தண்ணீர் குடித்தது. மகிழ்ச்சியுடன் அங்கிருந்து பறந்து சென்றது.
✰நீதி: முயன்றால் முடியாதது இல்லை.