Sign In

ஊருக்கு வெளியே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. அந்த மரத்தின் நிழல், மதிய வேளையில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் இருந்து வந்தது.

ஒரு நாள் வேடன் ஒருவன் அந்த பக்கமாக வந்தான். அவன் ஆலமரத்தின் நிழலில் ஓய்வெடுத்தான். அந்த மரத்தில் பல பறவைகள் இருப்பதைப் பார்த்தான்.
வேடன் தரையில் ஒரு வலையை விரித்தான். அதில் தானியங்களை சிதறி போட்டு வைத்தான். பின் அங்கிருந்த ஒரு புதரின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து ஒரு புறா கூட்டம் அந்த பக்கமாக வந்தது. அவை மரத்தின் கிழே தானியங்கள் இருப்பதைப் பார்த்தன. உடனே புறாக்கள் தரை இறங்கி தானியங்களை சாப்பிட ஆரம்பித்தன.

புதரின் பின்னால் ஒளிந்திருந்த வேடன் வெளியே வந்தான். வேடனைப் பார்த்து புறாக்கள் பறக்க முயன்றன. வலையில் சிக்கி இருப்பதை உணர்ந்தன.
புறாக்களின் அரசி மிகவும் புத்திசாலி. அதன் யோசனைப்படி புறாக்கள் வலையை அலகால் கவ்வி ஒன்றாக மேல் நோக்கிப் பறந்தன. வேடனால் புறாக்களை பிடிக்க முடியவில்லை.

புறாக்கள் வலையோடு பறந்து அவைகளின் எலி நண்பனிடம் சென்றன. எலி வலையைக் கடித்து புறாக்களை விடுவித்தது. புறாக்கள் எலிக்கு நன்றி கூறின.
நீதி: ஒற்றுமையே பலம்.