Sign In
நான் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் இன்று. அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.
“அம்மா! நான் பெரியவளாக வளர்ந்து விட்டேன். என் கையை விடுங்கள்!” என்று சொன்னேன். அம்மா என் கையை இறுக்கிப் பிடித்தார்.
பள்ளியின் அருகில் நிறைய குழந்தைகள் இருந்தனர்.
சிலர் பேருந்தில் வந்தனர். சிலர் காரில் வந்தனர். சிலர் மிதிவண்டியில் வந்தனர். சிலர் என்னைப் போல் நடந்தும் வந்தனர்.
பள்ளியின் வாசலை அடைந்தோம். அம்மா என் கையை விட்டார். அவர் வாசலிலேயே நின்றார். நான் இப்போது தனியாக உள்ளே சென்றேன். அங்கு என்னைச் சுற்றி நிறைய புது முகங்கள் இருந்தன.
முதல் அடி வைத்தேன். அடுத்த அடி வைத்தேன். திரும்பி அம்மாவைப் பார்த்தேன். நான் நடக்க நடக்க அம்மா சிறியதானார். நான் இப்படி நடந்து கொண்டே இருந்தால் அம்மா மறைந்து விடுவாரோ?
நான் அம்மாவிடம் திரும்பி ஓடினேன். இப்போது நான் அவ்வளவு பெரியவளாக உணரவில்லை. அம்மாவின் கையைப் பிடித்தேன். “போய்விடாதீர்கள்!” என்றேன்.
எல்லோரும் பள்ளியின் உள்ளே சென்றனர். நான் மட்டும் வெளியில் இருந்தேன். ஆசிரியை வெளியே வந்தார். என்னைப் பார்த்து சிரித்தார். நானும் சிரித்தேன்.
அம்மா சொன்னார், “ராணி, நீ பள்ளி முடிந்து வெளியே வரும்போது நான் இங்கே இருப்பேன்."
நான் அம்மாவின் கையை விட்டேன். என்னைப் பார்த்து அம்மா கையசைத்தார்.
நான் பள்ளியின் உள்ளே ஓடினேன். பள்ளி முடிந்ததும் என் அம்மா வெளியே நின்று கொண்டிருப்பார்.
இராணியின் முதல் நாள் பள்ளியில் (English-Tamil), translated by Uma Maheswari (© Uma Maheswari, 2015), based on original story Rani's First Day at School (English), written by Cheryl Rao, illustrated by Mayur Mistry, published by Pratham Books (© Pratham Books, 2015) under a CC BY 4.0 license on StoryWeaver. Read, create and translate stories for free on www.storyweaver.org.in