Sign In

ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. அங்கு வந்த சிறிய எலி தற்செயலாக தூங்கும் சிங்கத்தின் பாதத்தின் மேலே ஏறி ஓடியது.

இதனால் சிங்கம் விழித்தெழுந்து கோபத்துடன் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல தின்பண்டமாகப் போகிறாய்” என்று கர்ஜித்தது.

எலி சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள். நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்“ என்றது.
சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்து கொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?“ என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்கள் கழித்து, அந்தச் சிங்கம் வேடர்கள் விரித்திருந்த வலையில் சிக்கிக்கொண்டது. வலையில் சிக்கிக்கொண்ட சிங்கம் பலமாக கர்ஜித்து அழுதது.
அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தை கேட்டு அந்த இடத்திற்கு வந்தது. முதலில் பயந்தாலும், அதனுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எலி உறுதியாக இருந்தது.

எலி தனது கூர்மையான பற்களால் வலையை வெட்டியது. அதனால் பெரிய சிங்கம் சிறிய எலியால் விடுவிக்கப்பட்டது.
✰நீதி: உருவத்தைப் பார்த்து யாரையும் எடை போடக் கூடாது.

This work is based on an original work of the Core Knowledge® Foundation made available through licensing under a Creative Commons Attribution- NonCommercial-ShareAlike 3.0 Unported License. This does not in any way imply that the Core Knowledge Foundation endorses this work. Illustrated by Gail McIntosh.