Sign In

ஒரு ஊரில் ஒரு தொப்பி விற்பவர் இருந்தார். அவர் பல விதமான, அழகழகான தொப்பிகளைச் செய்வார். பக்கத்தில் இருக்கும் ஊருகளுக்குச் சென்று தொப்பிகளை விற்பார்.

ஒரு நாள் தொப்பிகளை விற்க ஒரு புதிய ஊருக்குச் சென்றார். நீண்ட தூரம் நடந்ததால், அவர் மிகவும் களைப்படைந்தார்.

அதனால், பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்தார். தான் கொண்டு வந்த உணவை சாப்பிட்டார்.

மரத்தில் சாய்ந்தபடியே, கண்களை மூடி சிறிது நேரம் தூங்கினார்.

அந்த மரத்தின் மேலே சில குரங்குகள் இருந்தன.

அவை மெதுவாக மரத்தின் மேலே இருந்து கீழே இறங்கி வந்தன.

குரங்குகள் தொப்பிகள் இருந்த பையைத் திறந்து பார்த்தன. ஐ! சூப்பர்! தொப்பி! பல நிறங்கள்..!

குரங்குகள் தொப்பியைத் தலையில் போட்டுக் கொண்டன.

குரங்குகளுக்கு மிகவும் மகிழ்ச்சி. குரங்குகள் பாட்டுப் பாடி விளையாடின.

தொப்பி விற்பவர் தூக்கம் கலைந்து மெதுவாக கண்களைத் திறந்தார். குரங்குகள் மரத்தின் மேலே ஏறின.

மரத்தின் மேலே இருந்தபடியே, குரங்குகள் தொப்பி விற்பவரைக் கவனித்தன.

தொப்பி விற்பவர் தான் கொண்டு வந்த பை காலியாக இருப்பதைப் பார்த்தார். தொப்பிகள் எல்லாம் எங்கே? அவர் சுற்றிலும் தேடினார்.

பின் மரத்தின் மேலே பார்த்தார். குரங்குகள் தொப்பி போட்டுக் கொண்டிருந்தன.

“தொப்பியை எப்படி திரும்ப வாங்குவது?” யோசித்தார் தொப்பி விற்பவர்.

அவர் தலையில்இருந்த தொப்பியை எடுத்து குரங்குகளை நோக்கி வீசினார்.

குரங்குகளுக்கு கோபம் வந்தது.

குரங்குகள் தொப்பி விற்பவர் செய்தது போலவே தொப்பிகளை அவர் மேல் வீசின.

தொப்பி விற்பவர் தொப்பிகளை எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினார்.

குரங்குகளும் தொப்பியும் (Tamil), translated by லோகு வெங்கடாசலம், (© லோகு வெங்கடாசலம், 2019) from The Hat Seller (English), by Ananta Prasad Wagle based on original story टोपीवाला (Nepali), written by Ananta Prasad Wagle, illustrated by Promina Shreshtha, published by Room to Read under a CC BY 4.0 license on StoryWeaver. Read, create and translate stories for free on www.storyweaver.org.in