Sign In

வீட்டுக்குள் எலி ஒன்று புகுந்து விட்டது. அதை முதலில் பாட்டிதான் பார்த்தார். “எலி!” என்று கத்தியபடி அவர் சோஃபா மீது தாவி ஏறிக்கொண்டார். அதில் இருந்த குட்டித் தலையணைகள் எல்லாம் கீழே விழுந்தன.

“எங்கே ?” என்று கேட்டபடி அப்பா ஜன்னலில் ஏறினார். அவர் இழுத்ததில் திரைச்சீலைகள் எல்லாம் கீழே விழுந்தன.
“அங்கே!” என்று கத்தியபடி மேசையின் மீது தாவினார் அம்மா. அதில் இருந்த தட்டுகள் கீழே விழுந்து உடைந்தன.

“எலியைப் பிடி” என்று பூனையைப் பார்த்துக் கத்தினான் மிதுன். பூனை எலியைப் பார்த்தது, பின் ஓடிப்போய்க் கட்டிலுக்கு அடியில் புகுந்து கொண்டது.
“எலி!” என்று கத்தியபடி பூனைக்குப் பின்னால் ஓடினான் மிதுன்.

“நான் அந்த எலியை விரட்டுகிறேன்!” என்று தைரியமாகச் சொன்னார் அம்மா. ஒரு துடைப்பத்தை எடுத்து அங்கும் இங்கும் குத்தினார்.
“உனக்குப் பின்னாடி எலி!” என்று கத்தினார் அப்பா. அம்மா எலியைப் பார்த்தார், அவரும் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.

“இந்த எலியை எப்படி விரட்டணும்னு எனக்குத் தெரியும்!” என்றபடி சோஃபாவில் இருந்து குதித்து இறங்கினார் பாட்டி. ஒரு செய்தித்தாளை உருட்டி, அதை வைத்து அங்கும் இங்கும் குத்தினார்.

“எலி!” என்றார் அப்பா. ஜன்னலில் இன்னும் கொஞ்சம் மேலே ஏறிக்கொண்டார். “உங்களோட இடது பக்கம்!”
பாட்டி எலியைப் பார்த்தார். அவரும் ஓடி வந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.

“அடடா!” என்றார் அப்பா. அதற்கு மேலே அவரால் எற முடியவில்லை.
மெதுவாக ஜன்னலில் இருந்து இறங்கினார். எலியின் கண்ணில் படாமல் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.

“எலி! எலி!” என்று எல்லாரும் ஒன்றாகக் கத்தினார்கள். அந்தச் சத்தத்தில் பாப்பா விழித்து விட்டாள்.
அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கண்களை மெதுவாகத் தேய்த்துக் கொண்டாள். அட, அங்கே தலையணையில் என்னது?

அதற்கு இரண்டு கண்கள், நான்கு கால்கள், ஒரு நீண்ட வால் இருந்தது. “எலி!” என்று மகிழ்ச்சியாக கைத் தட்டினாள் பாப்பா.
பாப்பா எலியைப் பார்த்தாள், எலி ஓட ஆரம்பித்தது. பாப்பாவும் பின்னாடியே ஓடினாள்.

சோஃபாவில் ஏறி, ஜன்னலில் தாவி, மேசை மேல் குதித்து, தலையணைகளில் உருண்டு...

...திரைச்சீலைகளுக்கு இடையே புகுந்து, தட்டுகளில் தடுமாறி, கதவைத் தாண்டி வெளியே ஓடி விட்டது!

எலி! எலி! (Tamil), translated by N. Chokkan, based on original story Mouse in the House (English), written by Sowmya Rajendran, illustrated by Tanaya Vyas, published by Pratham Books (© Pratham Books, 2015) under a CC BY 4.0 license on StoryWeaver. Read, create and translate stories for free on www.storyweaver.org.in