Sign In
சுசீலா தமிழ்நாட்டில் வசிக்கிறாள். அவள் தன் அம்மாவிடம் இருந்து கோலம் போடக் கற்றுக் கொண்டாள்.
சுசீலாவுக்கு, ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் ஒரே ஒரு கோலம் போட அனுமதி உண்டு.
கோலம் போடுவது என்றால் சுசீலாவுக்கு மிகவும் பிடிக்கும்! அவள் தரையிலும் படிகளிலும் சுவர்களிலும் கோலம் போடுவாள்.
ரயில்களிலும் உயரமான கட்டிடங்களிலும்…
...வானத்தில் பறக்கும் பட்டங்கள் மீதும்தான்! அனைவரும் சுசீலாவின் கோலங்களைக் கண்டு ரசித்தனர்!
ஒரு நாள், விமானப் படையினர் ஒரு கோலம் உருவாக்க உதவும்படி சுசீலாவிடம் கேட்டனர்! விமானங்களை எப்படித் திருப்ப வேண்டும், இறங்கவும் ஏறவும் வேண்டும் என சுசீலா சொன்னாள்...
...சிறிது நேரம் கழித்து வானத்தில் ஒரு பெரிய, அழகான, வண்ணமயமான கோலம் தோன்றியது! நகரத்தில் உள்ள எல்லோரும் பார்க்கும்படி!
அன்று இரவு, சுசீலா தனது மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்கள் அவளைப் பார்த்து மின்னின. சுசீலா அடுத்து எங்கே கோலம் போடுவாள் என்று நினைக்கிறீர்கள்?
சுசீலாவின் கோலங்கள் (Tamil), translated by Praba Ram, Sheela Preuitt, based on original story Susheela's Kolams (English), written by Sridala Swami, illustrated by Priya Kuriyan, published by Pratham Books (© Pratham Books, 2012) under a CC BY 4.0 license on StoryWeaver. Read, create and translate stories for free on www.storyweaver.org.in