Sign In
ஒரு காட்டில் மூன்று சிறிய பன்றிகள் வாழ்ந்து வந்தன. அவை வீடு கட்ட முடிவு செய்தன.
முதல் பன்றி ஒரு சோம்பேறி. வேலை குறைவு என்பதால் வைக்கோல் வைத்து வீடு கட்டியது. ஒரே நாளில் வீட்டைக் கட்டி முடித்தது.
இரண்டாவது பன்றி முதல் பன்றி அளவுக்கு சோம்பேறி இல்லை. ஆனாலும் கடின வேலை செய்ய விரும்பாதது. அது மரக்குச்சிகள் வைத்து வீடு கட்டியது. சில நாட்களில் வீட்டைக் கட்டி முடித்தது.
மூன்றாவது பன்றி ஒரு உழைப்பாளி. நல்ல புத்திசாலியும் கூட. அது செங்கல் வைத்து வலிமையான வீடு கட்டியது. ஒரு மாதம் கடின வேலை செய்து வீட்டைக் கட்டி முடித்தது.
சில மாதங்கள் கழித்து, ஓநாய் ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. மூன்று புதிய வீடுகளில் பன்றிகள் வசிப்பதைப் பார்த்தது. இன்று எனக்கு நல்ல விருந்து என்று ஓநாய் நினைத்தது. ஓநாய் முதல் பன்றியின் வீட்டின் கதவைத் தட்டியது.
“நான் உள்ளே வரலாமா?” கேட்டது ஓநாய்.
“இல்லை” என்றது முதல் பன்றி.
ஓநாய், முதல் பன்றியின் வைக்கோல் வீட்டை ஊதித் தள்ளியது. முதல் பன்றி இரண்டாவது பன்றியின் வீட்டுக்கு ஓடியது. ஓநாயும் பின்தொடர்ந்தது.
ஓநாய் இரண்டாவது பன்றியின் வீட்டின் கதவைத் தட்டியது.
“நான் உள்ளே வரலாமா?” கேட்டது ஓநாய்.
“இல்லை” என்றது இரண்டாவது பன்றி.
ஓநாய், இரண்டாவது பன்றியின் மரக்குச்சி வீட்டையும் ஊதித் தள்ளியது. இரண்டு பன்றிகளும் மூன்றாவது பன்றியின் வீட்டுக்கு ஓடின. ஓநாயும் பின்தொடர்ந்தது.
ஓநாய் மூன்றாவது பன்றியின் வீட்டின் கதவைத் தட்டியது.
“நான் உள்ளே வரலாமா?” கேட்டது ஓநாய்.
“இல்லை” என்றது மூன்றாவது பன்றி.
ஓநாய் பல முறை முயன்றும் மூன்றாவது பன்றியின் செங்கல் வீட்டை ஊதித் தள்ள முடியவில்லை. அதனால் வீட்டின் புகைபோக்கி வழியாக உள்ளே குதித்தது.
அங்கே கொதித்துக் கொண்டிருந்த வெந்நீர் பானைக்குள் விழுந்தது. அதன் பின் ஓநாய் பன்றிகள் இருந்த பக்கமே வரவில்லை. மூன்று பன்றிகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.
This work is based on an original work of the Core Knowledge® Foundation made available through licensing under a Creative Commons Attribution- NonCommercial-ShareAlike 3.0 Unported License. This does not in any way imply that the Core Knowledge Foundation endorses this work. Illustrated by Gail McIntosh.