Sign In
அது ஒரு அழகான கிராமம். அதைத் தொடர்ந்திருந்த அடர்ந்த காட்டின் விளிம்பில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தில் இரு காகங்கள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. கிராமம் பக்கத்தில் இருந்ததால் காகங்களுக்கு உணவுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை. அவை தினமும் காலையில் இரை தேடி கிராமத்திற்குள் செல்வது, மாலையில் கூட்டிற்குத் திரும்புவது என மகிழ்ச்சியாக இருந்தன.
சில காலம் கழித்து, பெண் காகம் முட்டையிட்டது. அவை இரண்டும் தங்களது குஞ்சுகள் வரவுக்காக ஆர்வமாக காத்திருந்தன.
காகங்கள் வாழ்ந்து வந்த மரத்தின் அடியில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அந்த பொந்துக்கு ஒரு பெரிய விஷ பாம்பு குடி வந்தது. முட்டையிலிருந்து குஞ்சுகள் எப்போதும் வரலாம் என்ற நிலையில், பாம்பு அங்கே குடி வந்தது காகங்களுக்குச் சிறிது நெருடலாகவே இருந்தது. இருந்தாலும், அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அமைதியாக இருந்தன.
வழக்கம் போல் காலையில் காகங்கள் இரை தேடி கூட்டிலிருந்து கிளம்பின. அவை சென்றபின், மரத்தின் அடியிலிருந்து பாம்பு வெளியே வந்தது. அது மரத்தின் மேல் ஏறி முட்டைகளை விழுங்கியது. பின் தன் பொந்துக்குத் திரும்பியது.
மாலையில் கூட்டிற்கு திரும்பிய காகங்கள், கூடு காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தன. “கூட்டிலிருந்த அனைத்து முட்டைகளும் எவ்வாறு ஒரே நேரத்தில் காணாமல் போகும்?” திகைத்து நின்றன காகங்கள்.
காற்றில் முட்டைகள் கீழே விழுந்திருக்குமோ என்று வேகமாக கீழே சென்று மரத்தைச் சுற்றிலும் தேடின. சருகுகளைக் கிளறியும் தேடி பார்த்தன. எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. தேடி தேடி களைப்புற்று மன வருத்தத்துடன் கூடு திரும்பின.
குஞ்சுகளைத் தொலைத்த வருத்தத்துடன் வாழ்ந்து வந்தன காகங்கள். அவைகளின் வருத்தத்தைப் போக்கும் வகையில் பெண் காகம் மீண்டும் முட்டையிட்டது.
இந்த முறை காகங்கள் முட்டைகளைக் கவனமாக கூடவே இருந்து பார்த்துக் கொள்ளத் தீர்மானித்தன. அதனால், ஆண் காகம் மட்டும் இரை தேட சென்றது. பெண் காகம் எப்பொழுதும் கூட்டிலேயே இருந்து முட்டைகளைப் பார்த்துக் கொண்டது.
பாம்பு முட்டைகளைச் சாப்பிட சரியான தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால், பெண் காகம் எப்போதும் கூட்டிலேயே இருந்தது. இதனால் பொறுமை இழந்த பாம்பு, ஆண் காகம் இரை தேட சென்றபின் முட்டைகளைச் சாப்பிட மரத்தின் மேலே வந்தது.
பாம்பு பெண் காகத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நேரே முட்டைகளிடம் சென்றது. பெண் காகம் தன்னால் முடிந்தவரை பாம்பை தடுக்க முயன்றது. ஆனால் பயன் ஒன்றுமில்லை.
பாம்பு பெண் காகத்தின் கண் எதிரியிலேயே அதன் முட்டைகளை ஒவ்வொன்றாக விழுங்கியது. தன் முட்டைகளை பாம்பிடமிருந்து காப்பாற்ற முடியாமல் போனதால் ஆறா துக்கத்தில் இருந்தது பெண் காகம்.
மாலையில் ஆண் காகம் கூடு திரும்பியதும், துக்கத்தில் இருந்த பெண் காகம் கதறி அழுதது. பெண் காகம் நடந்தவற்றைக் கூற ஆண் காகம் துடித்து போனது. அவை இரண்டும் மிகவும் உடைந்து போயின.
பெண் காகம் அதற்க்கு மேல் அந்த கூட்டில் வாழ தயாராக இல்லை. அது வேறு இடத்திற்கு செல்ல வற்புருத்தியது. இன்னும் ஒருமுறை தன் முட்டைகளை இழக்க தான் தயாராக இல்லை என்று அழுதது பெண் காகம்.
“நாம் ஏன் செல்ல வேண்டும் ? அந்த பாம்பை இங்கிருந்து விரட்டுவோம். “ என்றது ஆண் காகம்.
அவை இரண்டும் அவர்களின் நண்பனான புத்திசாலி நரியிடம் சென்றன. நடந்தவற்றைக் கூறி, அந்த பாம்பை விரட்ட உதவி கேட்டன.
நரியும் சிறுது நேரம் யோசித்துவிட்டு, திட்டம் ஒன்றைக் கூறியது. அது நல்ல திட்டமாக தெரிந்ததால் காகங்கள் அதையே செயல்படுத்த முடிவு செய்தன. உதவிக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்பின.
மறுநாள் காலையில், திட்டமிட்டபடி காகங்கள் இரண்டும் அந்த நாட்டின் அரசி நீராடும் குளக்கரைக்குச் சென்றன. அரசியின் வருகைக்காக குளத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் மறைவாக காத்திருந்தன.
சிறுது நேரத்திலேயே அரசி தன் தோழிகளுடன் குளக்கரைக்கு வந்தார். அவர்களின் காவலுக்கு வந்த காவலாளிகள் சற்று தூரமாக அமர்ந்து, குளிப்பதற்கு தொந்தரவு இல்லாமல் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
அவை எதிர்பார்த்தப்படியே, அரசி தனது விலை உயர்ந்த ஆபரணங்களை கழற்றி குளத்தின் கரையில் வைத்து விட்டு தோழிகளுடன் குளத்தில் இறங்கினார்.
தக்க சமயம் பார்த்து, ஆண் காகம் விரைந்து சென்று குளத்தின் கரையில் இருந்த அரசியின் நகையை அலகில் கொத்தி கொண்டு மேலே பறந்தது. அப்போது பெண் காகம் “கா கா” என்று கத்தி அரசி மற்றும் காவலாளிகளின் கவனத்தை திருப்பியது.
அரசி தன் நகையை காகம் தூக்கி செல்வதை பார்த்ததும், காவலாளிகளை அழைத்து நகையை மீட்டு வருமாறு உத்தரவிட்டார். காவலாளிகள் காகத்தை பின் தொடர்ந்து ஓடினர்.
காகம் நேராக பறந்து தன் கூடு இருந்த மரத்துக்கு வந்தது. காகத்தை தொரடர்ந்து காவலர்களும் மரத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தார்கள்.
காகம் தன் அலகில் கொத்தி கொண்டு வந்திருந்த அரசியின் நகையை காவலர்கள் பார்க்கும் படியாக மரத்தின் அடியில் இருந்த பாம்பு பொந்தில் போட்டது.
காவலர்கள் பொந்தில் ஈட்டியை விட்டு நகையை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது பொந்தில் இருந்து பாம்பு சீறிக் கொண்டு வெளியே வந்தது.
பாம்பை காவலர்கள் துரத்த முயன்றனர். ஆனால், பாம்பு காவலர்களை கொத்த முயன்றது. அதனால் காவலர்கள் பாம்பை அடித்து கொன்றனர். பின் காவலர்கள் பொந்தில் இருந்து அரசியின் நகையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
இவை அனைத்தையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காகங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.