Sign In

முன்னொரு காலத்தில், ஊருக்கு சற்று வெளியே ஒரு பெரிய ஆலமரம் அதன் விழுதுகளைப் பரப்பி குடை போல் விரிந்திருந்தது. அது ஆண்டாண்டு காலமாக பல பறவைகளுக்கும், அணில், குரங்கு போன்ற விலங்குகளுக்கும் வீடாக இருந்தது.
முன்பெல்லாம் இன்று இருப்பது போல் போக்குவரத்து வசதி கிடையாது. மக்கள் பெரும்பாலும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடந்தே செல்வார்கள். அவ்வாறு செல்லும் வழிப்போக்கர்கள் அந்த மரத்தின் நிழலில் தங்கி ஓய்வெடுப்பார்கள்.
ஒரு நாள் அந்த பக்கமாக வேடன் ஒருவன் வந்தான். அவனும் மற்ற வழிப்போக்கர்களை போல் அந்த ஆலமரத்தின் நிழலில் படுத்து ஓய்வெடுத்தான். அவன் மரத்தில் பலவிதமான பறவைகள் இருப்பதைப் பார்த்தான்.
அவன் எப்படியும் சில பறவைகளையாவது பிடித்துக்கொண்டுதான் அங்கிருந்து கிளம்புவது என்று முடிவு செய்தான். வெயில் குறைந்ததும் மற்ற வழிப்போக்கர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக கிளம்பினர்.

எல்லோரும் சென்றபின், வேடன் மரத்தின் அடியில் ஒரு வலையை விரித்தான். அதன் மேல் அங்கும் இங்குமாக தானியங்களை சிதறி போட்டு வைத்தான். பிறகு ஆலமரத்தின் அருகிலிருந்த ஒரு புதரின் பின்னால் சென்று மறைந்து காத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து, புறாக்கள் கூட்டமாக அந்த மரத்தின் பக்கமாக பறந்து வந்தன. அவை மரத்தின் அடியில் தானியங்கள் கிடப்பதைப் பார்த்தன.
“அரசியே! அந்த ஆலமரத்தின் அடியில் நம் அனைவருக்கும் தேவையான அளவு தானியங்கள் கிடக்கின்றன“ என்று சுட்டி காட்டியது ஒரு புறா.
அந்த புறாக் கூட்டத்தின் அரசி மிகவும் புத்திசாலி. அதனால் அது அனைவரையும் கிழ்நோக்கி பறந்து மரத்தின் கிளைகளில் அமரச் சொன்னது. அதன் பிறகு, ஆட்கள் யாரும் அருகில் இல்லை என்பதை ஊறுதி செய்தது அரசி.
மேலும் அது வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் இடம் என்பதால், தானியங்கள் சிதறி கிடப்பது எந்த சந்தேகத்தையும் அரசிக்கு கொடுக்கவில்லை.
“சரி நாம் தரையில் உள்ள தானியங்களை சாப்பிடலாம்” என்றது அரசி.

புறாக்கள் மரத்திலிருந்து தரை இறங்கி தானியங்களை சாப்பிட ஆரம்பித்தன. அதுவரை புதரின் பின்னால் ஒளிந்திருந்த வேடன் வெளியே வந்தான்.
“இன்று நான் ஒரு புறாக் கூட்டத்தையே பிடிக்க போகிறேன்“ என்று சொல்லிக்கொண்டே புறாக்களை நோக்கி நடந்தான்.
வேடனைப் பார்த்ததும் புறாக்கள் பறக்க முயன்றன. அப்போதுதான் தெரிந்தது அவை வலையில் மாட்டிக்கொண்டன என்று.
புறாக்கள் பயத்திலும், என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்திலும் அங்கும் இங்கும் நகர முயன்று புறாக்களின் கால்கள் வலையில் நன்றாக சிக்கிக் கொண்டன.
வேடன் புறாக்களை நெருங்கிக் கொண்டிருந்தான். புறாக்களின் அரசி அவசர அவசரமாக யோசித்தது. நல்ல திட்டம் ஒன்று தோன்றியது அரசிக்கு.
புறாக்களின் அரசி தன் திட்டத்தை வேகமாக செயல்படுத்தியது.

பறவைகளே! பதட்டப்படாமல் அனைவரும் வலையை அலகால் கொத்தி தூக்குங்கள்” என்றது அரசி.
பறவைகள் அப்படியே செய்தன.
“இப்போது அனைவரும் ஒரே நேரத்தில் பறக்க முயற்சி செய்யுங்கள்“ என்றது அரசி.
என்ன அதிசயம் புறாக்கள் வலையோடு தரையிலிருந்து மேல் எழும்பி கொண்டிருந்தன. வேடன் புறாக்களைப் பிடிக்க விரைந்து தோல்வியுற்றான்.
வேடனிடம் இருந்து தப்பிப் பிழைத்த புறாக்கள் வலையோடு வானத்தில் பறந்தன. அப்போது புறாக்களின் அரசி தன் நண்பனான எலி இருக்கும் இடத்திற்கு போக வழி காட்டியது.
எலியின் வீட்டின் அருகே புறாக்கள் வலையோடு கிழே இறங்கின.
“நண்பா!” என்று அழைத்து புறாக்களின் அரசி.
அரசியின் சத்தம் கேட்டு வெளியில் வந்தது எலி. என்ன நடந்தது என்பதை புறாக்களின் அரசி எலியிடம் கூறியது.
“அரசியே! நீ உன் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையை சிறப்பாகவே செய்திருக்கிறாய். உன்னை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டது எலி.

எங்களை இந்த வலையிலிருந்து விடுவிக்க உன் உதவி வேண்டும் என்று கேட்டது அரசி. எலியும் சம்மதித்தது.
“எலியின் உதவியுடன் புறாக்கள் வலையிலிருந்து விடுபட்டன. புறாக்கள் எலிக்கு நன்றி கூறின.
✰நீதி: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.