Sign In

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டின் அரசனான சிங்கம் தன் வலிமை மீது கர்வம் கொண்டு, மற்ற விலங்குகளை துச்சமாக மதித்து கொன்று குவித்தது.
சிங்கம் தனது பசிக்காக மட்டும் இன்றி பொழுது போக்குக்காகவும், தனது வலிமையைக் காட்டவும் விலங்குகளைக் கொன்றதால் விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர, காட்டின் விலங்குகள் அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தன. அந்த கூட்டத்திற்கு சிங்கத்தையும் அழைத்தன. அங்கு விலங்குகள் சிங்கத்திடம் தங்கள் நிலைமையை எடுத்துக் கூறின.
“சிங்க ராஜாவே!, நீங்கள் வேட்டையாடுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அதற்கு பதிலாக தினமும் எங்களில் ஒருவர் உங்கள் குகைக்கு உணவாக வருகிறோம்.” என்று கெஞ்சிக் கேட்டன.
“சரி சம்மதிக்கிறேன். ஆனால், நேரம் தவறினால் ஒருவரையும் உயிரோடு விட மாட்டேன்.“ என்று கர்ஜித்தது சிங்கம்.
ஒருவழியாக சிங்கம் சம்மதித்து விட்டது என்ற நிம்மதியில் விலங்குகள் கலைந்து சென்றன. அன்று முதல் தினமும் ஒரு விலங்கு சிங்கத்திற்கு உணவாக சென்றது.

ஒரு நாள் முயலின் முறை வந்தது. அது மிகவும் புத்திசாலி. முயல் சிங்கத்திடமிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு திட்டம் தீட்டியது.
தனது உணவு நேரம் கடந்த பின்னும் ஒரு விலங்கையும் காணாமல் சிங்கம் கோபம் அடைந்தது. நேரம் ஆக ஆக சிங்கத்தின் கோபம் அதிகரித்தது. முயல் தன் திட்டத்தின்படி தாமதமாக சிங்கத்திடம் சென்றது.
“சிங்க ராஜாவே!, தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் வரும் வழியில் வேறு ஒரு வலிமை வாய்ந்த சிங்கம் சென்று கொண்டிருந்தது. அதன் கண்ணில் படாமல் வருவதற்கு நேரம் ஆகி விட்டது.” என்றது முயல்.
“என்னை விட வலிமையானதோ?” கர்ஜித்தது சிங்கம்.
“பார்ப்பதற்கு அவ்வாறே தெரிந்தது அரசே!” என்று சிங்கத்தின் கோபத்தை உச்சமாக்கியது முயல்.
“யார் வலிமையானவர் என்று உனக்கு காட்டுகிறேன். என்னோடு வந்து அந்த சிங்கத்தைக் காட்டு“ என்று விரைந்தது சிங்கம்.
முயல் சிங்கத்தை ஒரு கிணற்றிற்கு கூட்டி சென்றது.

“சிங்க ராஜாவே! இதற்குள் தான் அந்த சிங்கம் செல்வதை கடைசியாக நான் பார்த்தேன். எனக்கு பயமாக இருக்கிறது. நீங்கள் சென்று எட்டி பாருங்கள்.” என்று கிணற்றை காட்டியது.
சிங்கம் சென்று கிணற்றை எட்டிப் பார்த்தது. அதில் சிங்கத்தின் பிம்பம் தெரிந்ததது.
“அந்த பிம்பத்தை உண்மையான மற்றொரு சிங்கம் என்றே நம்பி விட்டது சிங்க ராஜா. அதைப் பார்த்து மனதிற்குள் மகிழ்ந்தது முயல்.
“நீதான் அந்த சிங்கமோ?” என்று கர்ஜித்தது சிங்கம். சிங்கத்தின் கர்ஜனை எதிரொலியாக கேட்டது.
அதைக் கேட்ட முயல், “சிங்க ராஜாவே! அந்த சிங்கம் மிகவும் கோபத்துடன் கத்துவதைப் கேட்டால் பயமாக இருக்கிறது. நாம் சென்றுவிடலாம் வாருங்கள்.” என்று பயந்தது போல் நடித்தது.
கோபத்தின் உச்சத்தில் இருந்த சிங்கம் சிறிதும் யோசிக்காமல் “நீயா? நானா? பார்த்துவிடுவோம் “என்று கூறியபடியே கிணற்றிற்குள் குதித்தது. நீரில் மூழ்கி இறந்தது சிங்கம்.

முயல் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. முயல் தன் புத்திசாலித்தனத்தால் சிங்கத்தை வென்று மற்ற விலங்குகளையும் காப்பாற்றியது. காடே மகிழ்ச்சி அடைந்தது.
✰நீதி: முயற்சியும் புத்திசாலித்தனமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.