Sign In
முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில் மாறன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். அவனது வீடு, அந்த கிராமத்தின் விளிம்பில் அமைந்து இருந்தது.
வீட்டை அடுத்து, மாறனுக்கு சொந்தமான ஒரு பெரிய வயல்வெளி இருந்தது. அதனை அடுத்து ஓரளவு அடர்ந்த காடு ஒன்று அமைந்திருந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை பருவம் தவறாமல் மழை பெய்து வந்ததால் மாறன் அவனுக்கு சொந்தமான வயலில் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் வளமுடன் வாழ்ந்து வந்தான். அவனது விவசாய வேலைகளுக்கு உதவி செய்வதற்கு நான்கு மாடுகளையும் வளர்த்து வந்தான். மாறன் மாடுகளுக்கு தேவையானவற்றை செய்து நன்றாக பார்த்துக்கொண்டான்.
ஆனால் சில ஆண்டுகளாக மழை பொய்த்ததால், அவனால் வயலின் சிறிய பகுதியில் மட்டுமே விவசாயம் செய்ய முடிந்தது. அந்த சிறிய பகுதிக்கு நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுத்து பாய்ச்சுவதற்கே வேலை அதிகமாக இருந்தது. அவனுக்கு மட்டும் இல்லை, மாடுகளுக்கும் வேலை அதிகம் தான். ஆனால், வேலைக்கு ஏற்ற விளைச்சலும் இல்லை, பண வரவும் இல்லை.
பண வரவு மற்றும் மழை குறைந்ததால் பெரும்பாலும் காய்ந்த புற்களும் சில நேரங்களில் புண்ணாக்கும் மாடுகளுக்கு உணவாக கிடைத்தது. பசும் புற்களை சுவைத்த நினைவுகளையும், முன்பு போல் அவற்றை சுவைக்கும் காலம் எப்போது வரும் என்பது பற்றியும் அவ்வப்போது மாடுகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்.
இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்கையில், ஒரு நாள் சிங்கம் ஒன்று காட்டிலிருந்து இந்த மாடுகளை பார்த்தது. உடனே, சிங்கத்திற்கு அந்த மாடுகளை சாப்பிடும் ஆசையும் பிறந்தது. அதற்கான நல்ல தருணம் பார்த்து காத்திருந்தது சிங்கம்.
ஒரு நாள் மாடுகள் மேய்ந்து கொண்டே வயல்வெளி தாண்டி காட்டின் உள்ளே சிறிது தூரம் சென்று ஏதேனும் பசும் புற்கள் இருக்கிறதா என்று தேடின. இதுதான் தக்க சமயம் என்று, காத்திருந்த சிங்கம் ஒரு மாட்டின் மீது பாய சென்றது. அதை சுதாரித்துக் கொண்ட மாடுகள் நான்கும் ஒன்று சேர்ந்து தன் கொம்புகள் கொண்டு சிங்கத்தை எதிர்த்தன. இதனை கொஞ்சமும் எதிர்பாராத சிங்கம் முதலில் தடுமாறியது. அது தடுமாறிய சமயத்தில் மாடுகள் சிங்கத்தை தூக்கி தொலைவில் எறிந்தன. மீண்டும் சிங்கம் தனது வலிமை முழுவதையும் திரட்டி மாடுகளை எதிர்த்தது. அனால் நான்கு மாடுகளின் ஒன்று சேர்ந்த சக்திக்கு முன் சிங்கத்தின் வலிமை ஒன்றும் இல்லாமல் போனது. இது சிங்கத்திற்க்கு புது அனுபவமாகவும் அதே நேரத்தில் பெரும் ஏமாற்றமாகவும் இருந்தது.
சிங்கம் தனது தோல்வியை நினைத்து வருந்தியது. ஆனாலும் எப்படியாவது அந்த மாடுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதற்கு வந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தது. முதலில் அவைகளிடம் நட்பாய் பழகலாம், பின்பு மாடுகள் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வரும்போது பயன்படுத்தி கொள்ளலாம் என்று முடிவு செய்தது.
அடுத்த நாள், சிங்கம் நேராக மாடுகளிடம் சென்று “ நேற்று நான் உங்களை தாக்கியதற்கு மிகவும் வருந்துகிறேன். உங்களின் ஒற்றுமையை நினைத்து பெரும் வியப்படைகிறேன். துன்பம் வரும்போது தோளோடு தோள் சேர்த்து நிற்கும் உங்கள் நட்பில் எனக்கும் ஒரு இடம் கிடைக்குமா? “ என்று கேட்டது. மாடுகளும் சிங்கத்தின் உள்ளுணர்வை புரிந்து கொள்ளாமல் சம்மதித்தன. அன்று முதல் சிங்கமும் அடிக்கடி அவைகளை சந்தித்து பழகி வந்தது.
வழக்கம் போல் ஒரு நாள் சிங்கம் மாடுகளை சந்த்தித்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது முதல் மூன்று மாடுகளும் நான்காவது மாட்டை விட்டு சிறுது தள்ளி சென்று சிங்கத்தை கண் ஜாடை செய்து தங்கள் அருகில் அழைத்தன. என்னவாக இருக்கும் என்று சிறிது யோசித்துக்கொண்டே சிங்கம் அந்த மூன்று மாடுகளை நெருங்கியது.
முதல் மாடு, “சிங்கமே நாங்கள் உன்னிடம் ஒரு உதவி கேட்கலாமா?” என்று வினவியது. அதற்கு சிங்கம், “இது என்ன கேள்வி? உரிமையுடன் உத்தரவு இடுங்கள். மகிழ்வுடன் செய்வேன். நானும் உங்களில் ஒருவன் அல்லவே“ என்று நெகிழ்வுடன் பதிலளிப்பது போல் நடித்தது சிங்கம். அதை கேட்டு மகிழ்ந்த மூன்று மாடுகளும் சிங்கத்திடம் “அடுத்த இரண்டு வாரங்களில் அந்த நான்காவது மாட்டுக்கு பிறந்த நாள் வருவதால், அன்று அதனை பசும் புற்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டி செல்ல நாங்கள் நினைக்கிறோம். அதற்கு உன் உதவி எங்களுக்கு வேண்டும். காட்டில் நல்ல பசும் புற்கள் இருக்கும் இடங்கள் ஏதேனும் உனக்கு தெரிய வந்தால் எங்களுக்கு சொல்வாயா?” என்று கேட்டன.
அதற்கு “நிச்சயமாக” என்று பதிலளித்து விட்டு அவைகளிடம் இருந்து விடை பெற்று விட்டு காடு திரும்பியது சிங்கம்.
சிங்கம் எதிர்பாத்து காத்திருந்த காலம் கைக்கு எட்டும் தூரத்தில். அதனால் அதற்கு தலை கால் புரியாத அளவு தாள முடியா மகிழ்ச்சி. அதே நேரத்தில் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது. பலவிதமான யோசனைகளை யோசித்து மனதில் படமாக திரும்ப திரும்ப ஓட்டி பார்த்தது சிங்கம். கடைசியில் இரண்டு நாட்கள் கழித்து, எல்லா விதத்திலும் நேர்மறையாகவும், தனக்கு மிகச் சரி எனவும் தோன்றிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து மாடுகள் இருக்கும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தது சிங்கம்.
சிங்கம் நேராக முதல் மூன்று மாடுகளிடம் சென்றது. “கடந்த இரண்டு நாட்களாக நான் எனது நண்பர்களிடம் விசாரித்ததில் மூன்று இடங்களில் சிறிய அளவு பரப்பில் பசும் புற்கள் இருப்பதாக சொல்கிறார்கள். நீங்கள் சென்று பார்த்து எந்த இடம் ஒத்து வரும் என்று பாருங்கள்” என்று கூறியது சிங்கம். மேலும், அந்த இடங்கள் காட்டின் மிகவும் உட்பகுதியில் இருப்பதால் மூன்று மாடுகளையும் சேர்ந்து செல்ல அறிவுறுத்தியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் அதிக தூரத்தில் இருப்பதால், அடுத்தடுத்த நாளில் பயணித்தால் களைப்பினால் சூரியன் மறைவதற்குள் திரும்பி வர இயலாமல் போக நேரிடலாம். அதனால் இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டு ஒவ்வொரு இடமாக செல்லவும் எடுத்துரைத்தது. மேலும் நான்காவது மாட்டிற்கு சந்தேகம் வராமல் இருக்க, நீங்கள் காட்டுக்குள் செல்லும் நாட்களில் நான் அதனுடன் இருக்கிறேன் என்று தனது திட்டத்தை சாதுரியமாக செயல்படுத்த தொடங்கியது சிங்கம்.
மாடுகளும் சிங்கம் சொல்லிய அனைத்துக்கும் சம்மதித்தன.
அடுத்த நாளே, முதல் இடத்தை சென்று பார்க்க முடிவு செய்தன அந்த மூன்று மாடுகள். சிங்கமும் நான் நாளை இங்கு வந்து நான்காவது மாட்டுடன் இருக்கிறேன் நீங்கள் காலையிலேயே உங்கள் பயணத்தை தொடங்கி விடுங்கள் என்று சொன்னது. மேலும், செல்லும் வழியின் விவரங்களை எல்லாம் மாடுகளுக்கு விளக்கி கூறியது சிங்கம். பின் மாடுகளிடம் விடை பெற்று, தன் திட்டப்படியே எல்லாம் இன்று நடந்தது என்ற மகிழ்வுடன் காடு திரும்பியது சிங்கம்.
மறுநாள், அதிகாலையிலேயே மூன்று மாடுகளும் வயல்வெளி நோக்கி நடக்க ஆரம்பித்தன. அதை கவனித்த நான்காவது மாடும் அவைகளை பின் தொடர்ந்தது. வயல்வெளியிலேயே சிறு நேரம் அங்கும் இங்கும் மேய்வது போல் நின்றுவிட்டு நான்காவது மாடு கவனிக்காத நேரம் பார்த்து காட்டுக்குள் சென்றன மூன்று மாடுகளும். சிறிது நேரத்தில் சிங்கம் வயல்வெளிக்கு வந்து சேர்ந்தது. அது நான்காவது மாட்டிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தது.
பேச்சுவாக்கில் தான் வரும் வழியில் முதல் மூன்று மாடுகளும் காட்டினுள் பசும் புற்கள் இருக்கும் இடத்தில் மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்ததாக கூறி, நீ ஏன் அவர்களுடன் இல்லாமல் இங்கு தனியாக இருக்கிறாய் என்று கேட்டது. அதை கேட்டு வியந்த நான்காவது மாடு “அவர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லையே” என்று அப்பாவியாக பதிலளித்தது. அதற்கு சிங்கம் “ஓ! அப்படியா, எனக்கும் ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை தற்செயலாக அவர்கள் அந்த பசும் புற்களை இன்று பார்த்திருக்கலாம். நான் அவர்களை காட்டினுள் பார்த்ததாக கூறியதை அவர்களிடம் கூறாதே. அவர்களாக இதை உன்னிடம் சொல்கிறார்களா? இல்லை உன்னை ஏமாற்றி விட்டு அவர்கள் மட்டும் பசும் புற்களை உண்கிறார்களா? என்பது நமக்கு தெரிய வந்து விடும்.” என்று சிங்கம் நான்காவது மாட்டின் மனதில் மெல்ல நஞ்சை விதைத்தது.
உடனே அதற்கு அந்த நான்காவது மாடு, “இது பற்றி அவர்கள் கட்டாயம் என்னிடம் சொல்வார்கள்” என்று பதிலளித்தது. அப்படி நடந்தால் எனக்கும் மகிழ்வுதான் என்று கூறி விடை பெற்று காடு திரும்பியது.
சிங்கம் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்தன மாடுகள். அங்கு சிறுது காலம் முன்பு வரை பசும் புற்கள் இருந்த அடையாளம் மட்டுமே இருந்தது. அதை கண்டு சோர்வு அடைந்தன. ஆனால் இன்னும் இரண்டு இடங்கள் உள்ளனவே என்று தமக்குள்ளே ஆறுதல் கூறி கொண்டு வயல்வெளிக்கு திரும்பின.
நான்காவது மாடு, முதல் மூன்று மாடுகள் வெகு தொலைவில் வருவதை கண்டதும், ஒன்றும் கண்டு கொள்ளாததுபோல் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தது. முதல் மூன்று மாடுகளும் சிறிறு நேரத்திலேயே வீடு திரும்பின. வழக்கம் போல் எல்லோரும் பேசிக் கொண்டிருந்து விட்டு தூங்க தயாராயின. ஆனால் நான்காவது மாடு, ஏன் அவர்கள் என்னிடம் எதை பற்றியும் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்ற கேள்வி தூங்கவிடாமல் நச்சரித்தது. அந்த மூன்று மாடுகளும் நல்ல வேளை நான்காவது மாடு எந்த கேள்வியும் கேட்கவில்லை என்ற நிம்மதியிலும், களைப்பிலும் நன்றாக தூங்கின.
மறுநாள், நான்கு மாடுகளும் எப்போதும் போல் வயல்வெளிக்கு சென்றன. நான்காவது மாட்டின் மனதுக்குள் கேள்வி பெரிதாகி கொண்டே சென்றது. இருந்தாலும் சாதாரணமாக இருப்பது போலவே காட்டி கொண்டது நான்காவது மாடு. முதல் மூன்று மாடுகளோ அடுத்த நாள் இரண்டாவது இடத்துக்கு செல்ல முடிவு செய்தன.
அடுத்த நாள் அதிகாலையில், முந்தைய நாள் இரவு ஒழுங்காக தூங்காததால் நான்காவது மாடு அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. இதுதான் தக்க சமயம் என்று எண்ணி முதல் மூன்று மாடுகளும் தங்கள் பயணத்தை தொடங்கின. நான்காவது மாடு கண் விழித்து பார்த்த போது முதல் மூன்று மாடுகளும் அங்கு இல்லை. சரி என்று வயல்வெளிக்கு சென்று பார்த்தது. அங்கும் அவர்களை காணாததால் கோபமும் குழப்பமும் அதிகரித்தது. அப்போது சிங்கம் அங்கு வந்து சேர்ந்தது. தான் இன்றும் அந்த மூன்று மாடுகளை காட்டுக்குள் பசும் புற்களை சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தேன் அதனால் உன்னிடம் என்ன நடந்தது என்பதை விசாரிக்க ஓடி வந்தேன் என்றது சிங்கம்.
“என்னவென்றே தெரியவில்லை அவர்கள் என்னிடம் அது பற்றி எதுவும் கூறவில்லை. மேலும் இன்று காலை நான் கண் விழித்த போதிலிருந்தே அவர்களை காணவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது எனக்கு.” என்று கூறியது நான்காவது மாடு.
“யாரை நம்புவது என்றே எனக்கு தெரியவில்லை. சரி போகட்டும். இன்றாவது அவர்கள் உன்னிடம் எதாவது கூறுகிறார்களா என்று பார்ப்போம். இல்லையேல் அடுத்த முறை இது போல் நடக்கும் போது நாம் இருவரும் நேரிலே சென்று நேரடியாகவே கேட்டு விடலாம் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று. அதுவரை பொறுமையாக இரு. தினமும் நான் உன்னை வந்து சந்திக்கிறேன்.” என்று ஆறுதல் கூறுவது போல் பேசி அந்த மூன்று மாடுகளும் உன்னை ஏமாற்றுகிறார்கள் என்று அந்த நான்காவது மாட்டை நம்ப வைத்தது சிங்கம். தனது வேலை இனிதே முடிந்ததால் மகிழ்வுடன் காடு திரும்பியது சிங்கம்.
போன தடவை போலவே சிங்கம் சொன்ன இரண்டாவது இடத்திலும் பசும் புற்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பின முதல் மூன்று மாடுகளும். பாவம், அந்த மூன்று மாடுகளுக்கும் சிங்கம் வேண்டும் என்றே தங்களை அலைய விடுகிறது என்பது தெரியவில்லை. கடைசியாக இன்னும் ஒரு இடம் மட்டுமே பாக்கி இருக்கிறது. கடைசி முயற்சியாக, ஒரு நாள் கழித்து அதையும் சென்று பார்த்து விடலாம் என்று மாடுகள் நினைத்தன. இந்த முறை இரவு நான்கு மாடுகளும் பெரிதாக தங்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ளாமல் தூங்க சென்றன. அது மேலும் நான்காவது மாட்டின் சந்தேகத்தை அதிகரித்தது.
அடுத்த நாள், நான்கு மாடுகளும் வழக்கம் போல் வயல்வெளி சென்றன. ஆளுக்கொரு பக்கமாக உலவி கொண்டிருந்தன. அப்போது விவரத்தை தெரிந்து கொள்ள சிங்கம் அங்கு வந்தது. அது நேராக நான்காவது மாட்டிடம் சென்று என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொண்டது. பின் முதல் மூன்று மாடுகளிடம் சென்றது. பார்த்த இரண்டு இடங்களில் எந்த இடத்தில் நல்ல புற்கள் இருக்கின்றன என்று தனக்கு எதுவும் தெரியாதது போல் கேட்டது சிங்கம். இரண்டு இடங்களிலுமே இப்போது பசும் புற்கள் இல்லை. ஆனால் முன்பு இருந்ததற்கான அடையாளம் உள்ளது என்று வருத்தத்துடன் கூறின மாடுகள்.
“அய்யோ! நான் விசாரித்த போது அங்கு இருப்பதாகவே கூறினார்கள். என்னை மன்னித்து விடுங்கள். ஆனால் நீங்கள் நாளை போகும் இடத்தில் கட்டாயம் புற்கள் உண்டு. நானே பார்த்திருக்கிறேன்” என்று மாடுகளுக்கு நம்பிக்கை கொடுத்து நாளை கட்டாயம் காட்டுக்குள் செல்வார்கள் என்பதை உறுதி படுத்தி கொண்டு, மகிழ்வுடன் காடு திரும்பியது சிங்கம். அந்த இரவும் பெரிதாக அவைகள் ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்ளாமலே தூங்க சென்றன.
அடுத்த நாள் அதிகாலையில் மூன்று மாடுகளும் காட்டுக்குள் செல்ல தயாராயின. அதே நேரத்தில் நான்காவது மாடும் தூக்கத்தில் இருந்து எழுந்தது. இருந்தாலும் தூங்குவது போல் நடித்து என்ன நடக்கிறது என்று பார்த்து கொண்டிருந்தது. மூன்று மாடுகளும் நேராக வயல்வெளி செல்வதை பார்த்தது கொண்டே படுத்திருந்தது நான்காவது மாடு. அதற்கு சிங்கம் சொன்னதுதான் சரி. அந்த மூன்று மாடுகளும் என்னை ஏமாற்றுகின்றன என்ற எண்ணம் மேலோங்கி கோபமும் ஆத்திரமும் அதிகமாகியது. மெதுவாக எழுந்து வயல்வெளி சென்று சிங்கத்தின் வருகைக்காக காத்திருந்தது நான்காவது மாடு.
சிங்கம் தனது நீண்ட நாள் காத்திருப்பு கைக்கு கிடைக்க போகும் மகிழ்வுடன் வயல்வெளிக்கு வந்தது. அங்கு தனக்காக வருத்தத்துடன் காத்திருந்த நான்காவது மாட்டை பார்த்ததும் உள்ளுக்குள் மகிழ்ந்து முகத்தை வருத்தத்துடன் வைத்து கொண்டு அதன் அருகில் சென்றது. இன்றும் அந்த மூன்று மாடுகளும் அதே இடத்தில் தான் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. “ நீயும் வா, நாம் இருவரும் சென்று நேராக கேட்டு விடலாம். நண்பனை விட்டு அவர்கள் மட்டும் பசும் புற்களை தனியாக சாப்பிடலாமா? இது சரியா?” என்று உசுப்பேத்தியது சிங்கம்.
நான்காவது மாடும் சரி என்று ஆத்திரத்துடன் கிளம்பியது சிங்கத்துடன். சிங்கம் தனது தந்திரம் பலித்தது என்று மாட்டை காட்டின் உட்பகுதிக்கு அழைத்து சென்றது. நல்ல அடர்ந்த பகுதிக்கு சென்றதும், சிங்கம் ஒரே பாய்ச்சலாக நான்காவது மாட்டின் மீது பாய்ந்து அதை கீழே வீழ்த்தியது.
அதை சற்றும் எதிர்பாராத நான்காவது மாடு, “ ஏன் இவ்வாறு செய்கிறாய்? உன்னை நம்பித்தானே நான் வந்தேன்?” என்று வலியுடன் கண்ணீர் ததும்ப கேட்டது.
அதற்கு சிங்கம், “அது உன் தவறு. உன் நண்பர்கள் உனது பிறந்த நாள் பரிசாக உனக்கு பசும் புற்களை கொடுக்க காட்டுக்குள் தேடி அலைகிறார்கள். ஆனால், அவர்களை சந்தேகப்பட்டு என்னுடன் இங்கு வந்து எனக்கு விருந்தாக போகிறாய்” என்று சிரித்தது. தனது முட்டாள் தனத்தை எண்ணி வருத்தத்துடன் இறந்து போனது நான்காவது மாடு. சிங்கம் தனது ஆசை தீர தின்றது.
முதல் மூன்று மாடுகளும், சிங்கம் சொன்னவாறே அங்கே புற்கள் இருந்ததைக் கண்டு ஆனந்தம் கொண்டன. மிக்க மகிழ்வுடன் வீடு திரும்பின. அங்கே நான்காவது மாட்டை காணவில்லை. இருட்டி விட்டதால், நாளை சென்று தேடலாம் என்று அசதியில் தூங்கிவிட்டன மூன்று மாடுகளும்.
மறுநாள் காலையில், மூன்று மாடுகளும் சென்று நான்காவது மாட்டை வழக்கமாக செல்லும் எல்லா இடங்களிலும் தேடின. எங்கும் காணவில்லை. எங்கு போய் இருக்கும் என்று தெரியாமல் குழப்பம் அடைந்தன. இங்கு எங்காவதுதான் போய் இருக்கும் எப்படியும் திரும்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்தன.
இரண்டு நாட்கள் கழித்து சிங்கம் நிலவரத்தை தெரிந்து கொள்ள வயல்வெளிக்கு வந்தது. மூன்று மாடுகளும் கவலையுடன் இருந்தன. சிங்கம் அவைகளிடம் சென்று “கடைசியாக சென்ற இடத்தில் புற்கள் இருந்ததா? நாளை மறுநாள் நான்காவது மாட்டுக்கு பிறந்த நாள் அல்லவா?” என்று எதுவுமே தெரியாதது போல் கேட்டது.
அதற்கு மாடுகள் “நீ சொன்னது போலவே அங்கு சிறிதளவு பசும் புற்கள் உள்ளன. ஆனால் இரண்டு நாட்களாக நான்காவது மாட்டை தான் காண வில்லை “ என்று கவலையுடன் கூறின. “என்ன கூறுகிறீர்கள்? இங்குதான் எங்காவது போய் இருக்கும். வழி தெரியாமல் சுற்றி கொண்டு இருக்கலாம். நானும் காட்டிற்குள் தேடி பார்க்கிறேன். என் நண்பர்களிடமும் சொல்கிறேன்.” என்று ஆறுதலாக பதில் கூறியது சிங்கம்.
பின் அது மூன்றாவது மாட்டிடம் தனியாக சென்று “நான் இன்று அந்த நான்காவது மாட்டை காட்டிற்குள் பார்த்தேன். அதற்கு உன் மேல் தான் ஏதோ கோவமாம். அதனால், வீட்டுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருக்கிறது. இதை நான் எல்லார் முன்னாடியும் சொன்னால், அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று எனக்கு தெரிய வில்லை. அதனால் தான் உன்னிடம் தனியாக சொல்கிறேன். நாளை யாருக்கும் தெரியாமல் காட்டின் உள்ளே வா. நான் உன்னை நான்காவது மாட்டிடம் கூட்டி செல்கிறேன். பின் மூவருமாய் திரும்பி வந்து மற்றவர்களிடம் நடந்ததை சொல்லலாம்” என்று கூறி மெல்ல அடுத்த விருந்துக்கு வலை விரித்தது சிங்கம்.
அதற்கு மூன்றாவது மாடு சம்மதம் சொல்லவே சிங்கம் மகிழ்வுடன் காடு திரும்பியது.
மூன்றாவது மாடு என்ன கோவமாக இருக்கும் என்று மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்தது. நாம் எல்லோரும் நல்ல நண்பர்கள். எப்போதும் சேர்ந்தே இருப்போம் மற்றும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். கடந்த சில நாட்களாகத்தான் அதை மட்டும் தனியாக விட்டுவிட்டு காட்டுக்கு சென்றோம். அதற்கு கோவம் வருவதாக இருந்தால் மூவர் மீதும் வர வேண்டும். ஏன் என் மேல் மட்டும்? ஏன் சிங்கம் என்னை மட்டும் இதை கூறி தனியாக வர கூறியது? என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதிற்குள்.
கடைசியாக இதை பற்றி மற்ற இரண்டு மாடுகளிடமும் கூறியது மூன்றாவது மாடு. இதை பற்றி பேச பேச மெதுவாக அந்த சிங்கத்தின் மீது சந்தேகம் வந்தது மாடுகளுக்கு. அதனால் அதை உறுதி செய்து கொள்ள மூன்றாவது மாடு சிங்கத்துடன் காட்டிற்குள் செல்லும் போது, மற்ற இரண்டு மாடுகளும் சிங்கத்திற்கு தெரியாமல் பின் தொடர முடிவு செய்தன.
அடுத்த நாள் காலையிலேயே மூன்று மாடுகளும் காட்டிற்குள் சிங்கம் சொன்ன இடத்திற்கு சென்றன. முதல் இரண்டு மாடுகளும் மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டன.
சிங்கம் அங்கு வந்த போது மூன்றாவது மாடு காத்திருப்பது அதற்கு குதூகலத்தை கொடுத்தது.
மூன்றாவது மாடு சிங்கத்திடம், “வா சீக்கிரம் சென்று நான்காவது மாட்டை கூட்டி வரலாம். யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறேன். அவர்கள் தேடுவதற்குள் திரும்ப வேண்டும்” என்று தான் தனியாக வந்திருப்பதாய் அடிகோடிட்டது மூன்றாவது மாடு. அதையே எதிர்பார்த்திருந்த சிங்கமும், இன்று நமக்கு இரண்டாவது விருந்து என்ற மகிழ்வுடன், “சரி போகலாம் வா” என்று முன் சென்றது. மூன்றாவது மாடும் வேகமாக பின் தொடர்ந்தது. முதல் இரண்டு மாடுகளும் மறைந்து பின் தொடர்ந்தன.
நான்காவது மாட்டை கொன்று தின்ற அதே இடத்திற்கு, மூன்றாவது மாட்டையும் அழைத்து சென்றது சிங்கம். அங்கு சென்றதும் சிங்கம் நின்று பலமாக சிரித்தது.
“ஏன் உனக்கு என்ன ஆயிற்று ? ஏன் திடிரென்று இவ்வாறு சிரிக்கிறாய்?” என்று கேட்டது மூன்றாவது மாடு.
“அட முட்டாளே!, இதே இடத்தில் தான், நான் அந்த மூன்றாவது மாட்டை அடித்து, ருசித்து சாப்பிட்டேன். இன்று உன் முறை. நாளை உன் நண்பர்கள்” என்று கூறி மீண்டும் சிரித்தது.
இதை கேட்டு மூன்றாவது மாட்டிற்கும், மறைந்திருந்த முதல் இரண்டு மாடுகளுக்கும் கோவம் தலைக்கு மேல் வந்தது. அந்த கோபத்துடன் இரவு திட்டமிட்டபடியே, சிங்கம் சிறிதும் எதிர்பாராத வேளையில் மூன்றாவது மாடு முன்னாள் இருந்தும், மற்ற இரண்டு மாடுகளும் பின்னால் இருந்தும் ஒரே நேரத்தில் சிங்கத்தை தாக்கி வீழ்த்தின. “நண்பனாக நடித்து எங்களில் ஒருவரை கொன்றதிற்கு இதுவே தண்டனை “ என்று கூறி வீழ்ந்திருந்த சிங்கத்தை கொம்பால் குத்தி கொன்றன மாடுகள்.
நீதி: ஒற்றுமையே பலம்.