Sign In
முன் ஒரு காலத்தில், மூன்று சிறிய பன்றிகள் தன் தாய் பன்றியுடன் வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் தாய் பன்றி, “பிள்ளைகளே! நீங்கள் எல்லாம் உங்களை நீங்களே பார்த்து கொள்ளும் அளவிற்கு பெரியவர்களாக வளர்ந்து விட்டீர்கள். அதனால் இங்கிருந்து வெளியே சென்று உங்களுக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்” என்று கூறியது.
தாய் பன்றி தன் குட்டி பன்றிகளுக்கு ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து வழி அனுப்பி வைத்தது. சிறிய பன்றிகள் அவர்களது உடமைகளை சிறிய மூட்டையாக கட்டி கொண்டு கிளம்பின. பகல் முழுவதும் தங்களுக்கான இடத்தை தேடி அலைந்தன. சூரியன் மறைய தொடங்கியதும் ஒரு பெரிய மரத்தடியில் அந்த இரவைக் கழிக்க முடிவு செய்தன. இரவில் மூன்று பன்றிகளும் ஒருவருக்கு ஒருவர் உதவும் வகையில் அருகருகே வீடு கட்டிக்கொள்ள தீர்மானித்தன.
அடுத்த நாள் காலையில் மூன்று பன்றிகளும் தங்களுக்கான வீடு கட்டும் இடத்தைத் தேர்ந்தெடுத்தன.
முதல் பன்றி வைக்கோல் மிக மலிவான விலையில் கிடைக்கும் என்பதாலும், அதை வைத்து வீடு கட்டுவது எளிது என்பதாலும் தன் வீட்டை வைக்கோல் வைத்து கட்ட முடிவு செய்தது. வைக்கோல் வாங்க ஒரு விவசாயிடம் சென்றது.
முதல் பன்றி விவசாயிடம், “நான் வீடு கட்ட சிறிது வைக்கோல் எடுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்டது.
“எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்” என்றார் விவசாயி.
முதல் பன்றி தனக்கு வீடு கட்ட தேவையான வைக்கோலை மிக குறைவான பணத்திலேயே வாங்கி விட்டது.
இரண்டாவது பன்றி மரக்குச்சிகள் ஓரளவு மலிவு விலையில் கிடைக்கும் என்பதாலும், அது வைக்கோலை விட வலிமையானது என்பதாலும், அதன் வீட்டை மரக்குச்சிகளால் கட்ட முடிவு செய்து ஒரு மரவெட்டியிடம் சென்றது.
இரண்டாவது பன்றி மரவெட்டியிடம், “நான் வீடு கட்ட உங்களிடம் மரக்குச்சிகள் வாங்க வந்துள்ளேன்.” என்றது.
“சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளாய். ஊரிலே இங்கு மட்டும்தான் உயர்தர தேக்கு மரக்குச்சிகள் கிடைக்கும்!” என்று பதிலளித்தார் மரவெட்டி.
இரண்டாவது பன்றி தனக்கு வீடு கட்ட தேவையான மரக்குச்சிகளை சிறிதளவு பணத்திலேயே வாங்கி விட்டது.
மூன்றாவது பன்றி செங்கல் விலை அதிகம் என்றாலும், அதை வைத்து கட்டும் வீடு அனைத்து பருவக்காலங்களிலும் நிலைத்து நிற்கும் என்பதால், அதன் வீட்டை செங்கல் வைத்து கட்ட முடிவு செய்து ஒரு செங்கல் சூளைக்குச் சென்றது.
மூன்றாவது பன்றி அங்கிருந்த வியாபாரியிடம், “நான் செங்கல் வாங்க வந்துள்ளேன்” என்று கூறியது.
“நன்று. உனக்குத் தேவையான செங்கல்களை அங்கிருந்து எடுத்துக்கொண்டு, பணத்தை இங்கு வந்து கட்டி செல்” என்று செங்கல் இருக்கும் பகுதியை சுட்டிக் காட்டினார் வியாபாரி.
மூன்றாவது பன்றி தனக்கு வீடு கட்டத் தேவையான செங்கல்களை வாங்குவதற்கு தனது பணத்தின் பெரும் பகுதியை செலவு செய்தது.
மூன்று பன்றிகளும் தங்களது வீடுகளை அன்றே கட்டத் தொடங்கின.
முதல் பன்றி தனது வீட்டை மாலை நேரத்திற்கு முன்பே கட்டி முடித்தது. மீதி இருந்த பணத்தில் சொகுசான மெத்தை ஒன்று வாங்கியது. பின்னர் வீட்டின் உள்ளே சென்று தேநீர் அருந்தியபடியே ஓய்வெடுத்தது.
அதைப் பார்த்த இரண்டாவது பன்றி, தனது வீட்டை கட்டும் வேலையை துரிதப்படுத்தியது. இரவு முழுவதும் வேலை செய்து மறுநாள் காலைக்குள் தனது வீட்டைக் கட்டி முடித்திருந்தது. பிறகு, மீதமிருந்த பணத்தைக் கொண்டு நல்ல மெத்தை ஒன்றை வாங்கி அதில் ஓய்வெடுத்தது.
மூன்றாவது பன்றி தனது வீட்டின் அடிவாரத்தை மட்டுமே தோண்டி முடித்திருந்தது. வீடு கட்டி முடிக்கும் வரை இரவில் வெளியிலேயே தூங்க முடிவு செய்தது.
தொடர்ச்சியான நான்கு நாட்கள் கட்டுமானப் பணிக்குப் பிறகும், மூன்றாவது பன்றி வீட்டின் தளத்தைக் கூட முடிக்கவில்லை.
அதைப் பார்த்த முதல் இரண்டு பன்றிகளும், “நீ என்ன வீடு கட்டுகிறாயா? இல்லை அரண்மனை கட்டுகிறாயா? உன் வேகத்தைப் பார்த்தல் இந்த ஜென்மத்தில் நீ கட்டி முடிக்கப் போவதாக தெரியவில்லை” என்று கேலி செய்தன.
மூன்றாவது பன்றி தன் சகோதரர்களின் கேலி, கிண்டல்களைப் பொருட்படுத்தாமல் தன் வேலையில் கவனத்தைச் செலுத்தியது. கிட்டத்தட்ட ஒரு மாத கடின உழைப்பிற்கு பிறகு தனது வீட்டைக் கட்டி முடித்தது. பிறகு, மீதமிருந்த கொஞ்ச பணத்திற்குப் பாய் ஒன்று வாங்கி அதில் படுத்துத் தூங்கியது.
மூன்று பன்றிகளும் மகிழ்ச்சியாக தத்தம் வீடுகளில் வாழ்ந்து வந்தன.
சில மாதங்கள் கழித்து, ஓநாய் ஒன்று முதல் பன்றியின் வீட்டுக் கதவைப் பலமாகத் தட்டியது.
“சிறிய பன்றியே!, நான் உள்ளே வரலாமா?” என்று கேட்டது ஓநாய்.
“கண்டிப்பாக இல்லை” என்று பதிலளித்தது முதல் பன்றி.
“அப்படியானால் உன் வீட்டை ஊதித் தள்ளப் போகிறேன்” என்று பயமுறுத்தியது ஓநாய்.
“முயன்று பார் உன்னால் முடிந்தால்!” என்று கூறியது முதல் பன்றி.
முதல் பன்றியின் வைக்கோல் வீடு மிகவும் வலிமை குறைவாக இருந்ததால் ஓநாய் மிக எளிதாக அதை ஊதித் தள்ளிவிட்டது.
முதல் பன்றி பயத்தில் அலறிக்கொண்டே இரண்டாவது பன்றியின் வீட்டிற்க்கு உள்ளே ஓடியது. ஓநாயும் பின் தொடர்ந்தது.
“நீ இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டது இரண்டாவது பன்றி.
“ஒரு கொடிய ஓநாய் என் வீட்டை ஊதி இடித்து விட்டது. அது இப்பொழுது என்னைச் சாப்பிட வந்து கொண்டிருக்கிறது. கதவை சாத்து.” என்றது முதல் பன்றி.
இரண்டாவது பன்றி கதவை இழுத்து மூடி தாழிட்டது. ஓநாய் கதவை ஓங்கித் தட்டியது.

“கண்டிப்பாக இல்லை” என்று பதிலளித்தது இரண்டாவது பன்றி.

“முயன்று பார் உன்னால் முடிந்தால்! என் வீடு மிகவும் வலிமையானது” என்று பெருமையாக கூறியது இரண்டாவது பன்றி.
இரண்டாவது பன்றியின் வீட்டையும் ஓநாய் எளிதாக ஊதித் தள்ளிவிட்டது.
“ஐயோ” என்று அலறிக்கொண்டே முதல் இரண்டு பன்றிகளும் மூன்றாவது பன்றியின் வீட்டுக்குள் ஓடியது.
“என்னவாயிற்று உங்களுக்கு?” கேட்டது மூன்றாவது பன்றி.
“சீக்கிரமாக கதவை சாத்து. ஓநாய் துரத்துகிறது.” என்றன முதல் இரண்டு பன்றிகளும்.
மூன்றாவது பன்றி கதவை இழுத்து மூடி தாழிட்டது. ஓநாய் கதவை ஓங்கித் தட்டியது.

“கண்டிப்பாக இல்லை” என்று பதிலளித்தது மூன்றாவது பன்றி.
“அப்படியானால் உன் வீட்டையும் உன் சகோதரர்களின் வீட்டைப் போல ஊதித் தள்ளப் போகிறேன்” என்று பயமுறுத்தியது ஓநாய்.
“முயன்று பார் உன்னால் முடிந்தால்! என் வீட்டை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று சவால் விட்டது மூன்றாவது பன்றி.
ஓநாய் மூச்சை நன்றாக உள் இழுத்து ஊதியும் ஒரு செங்கலைக் கூட அசைக்க முடியவில்லை.
ஓநாய் மீண்டும் மீண்டும் முயன்று தோல்வி அடைத்தது. “ஊதி உடைக்க முடியாவிட்டால் என்ன? நான் என் கைகளால் உடைக்கிறேன் பார் “ என்று கூறியபடியே ஓநாய் ஓங்கி கதவில் ஒரு குத்து விட்டது. கையின் மணிக்கட்டை உடைத்துக்கொண்டது.
அதோடு விடவில்லை கோபமடைந்த ஓநாய். வேகமாக ஓடி சென்று மூன்றாவது பன்றியின் வீட்டின் கதவை தலையால் மோதியது. ஒன்றும் நடக்க வில்லை. ஓநாய் மீண்டும் மீண்டும் முயன்று கடைசியில் மயக்கமுற்றது. சில மணி நேரம் கழித்து கண்விழித்தது.
“உங்கள் மூவரையும் சாப்பிடுவதற்கு முன் நான் இங்கிருந்து போவதாக இல்லை” என்று கூறியபடியே வீட்டுக் கூரையில் எற ஆரம்பித்தது ஓநாய்.
ஓநாயின் திட்டத்தை நொடியில் உணர்ந்த மூன்றாவது பன்றி புகைபோக்கியின் அடியில் நெருப்பு மூட்டி, அதில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொதிக்க வைத்தது.
ஓநாய் மூன்றாவது பன்றி ஊகித்தது படியே, புகைபோக்கியின் வழியே வீட்டிற்குள்ளே நுழைய முயன்று கொதிக்கும் வெந்நீரில் விழுந்தது.
“ஆ” என்று வலியில் அலறியபடியே வீட்டை விட்டு வெளியே ஓடிய ஓநாய், அதற்க்குப் பிறகு பன்றிகள் இருந்த திசைப் பக்கமே திரும்ப வில்லை.
முதல் இரண்டு பன்றிகளும் மூன்றாவது பன்றிக்கு நன்றி தெரிவித்தன. அதன் பிறகு அவைகளும் மூன்றாவது பன்றி போலவே வலிமையான வீடுகளைக் கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்தன.
This work is based on an original work of the Core Knowledge® Foundation made available through licensing under a Creative Commons Attribution- NonCommercial-ShareAlike 3.0 Unported License. This does not in any way imply that the Core Knowledge Foundation endorses this work. Illustrated by Gail McIntosh.