Sign In
0
சின்னச் சின்னக் கிளியிது.
சிவந்த மூக்குக் கிளியிது.
சொன்ன வார்த்தை சொல்லியேசொக்க வைக்கும் கிளியிது!
கொய்யாப் பழம் தன்னையே
கொத்தித் தின்னும் கிளியிது.
பையப் பைய நடந்திடும்பச்சை நிறக் கிளியிது!